தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தை மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் பெரியநாயகி அம்மன் திருக்கடையூர் அபிராமி அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தாலாட்டுப்பாடி, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தியாகதுருகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Follow US
Find US on Social Medias
- Advertisement -
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!