குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது: விழிப்புணர்வு பேரணி

குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது விழிப்புணர்வு பேரணி
குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது விழிப்புணர்வு பேரணி
குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது: விழிப்புணர்வு பேரணி

குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.பி.என்‌.ஸ்ரீதர்‌, இ.ஆ.ப, அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சங்கராபுரம்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌ மாவட்ட சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைகள்‌ துறையின்‌ சார்பில்‌ குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.பி.என்‌.ஸ்ரீதர்‌, இ.ஆ.ப, அவர்கள்‌ இன்று (04.05.2022)கொடியசைத்து தொடங்கி வைத்தார்‌.

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌ குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ மாவட்ட சமூக நலன்‌ மற்றும்‌ உரிமைகள்‌ துறை மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம்‌ சங்கராபுரம்‌ பகுதியில்‌ உள்ள பொதுமக்களுக்கு குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது தொடர்பாகவும்‌, குழந்தைத்‌ திருமணம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாகவும்‌, பள்ளி மாணவிகள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மைய பணியாளர்களைக்‌ கொண்டு, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இப்பேரணியில்‌ “வளர்‌ இளம்‌ பெண்‌ மணப்பெஎர்‌ அல்ல”, “ஒன்றுபடுவோம்‌ உறுதியேற்போம்‌ குழந்தைத்‌ திருமணம்‌ இல்லா சமுதாயம்‌ படைப்போம்‌”, குழந்தைத்‌ திருமண தடைச்‌ சட்டம்‌ உள்ளிட்ட வாசகங்கள்‌ அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவிகள்‌ ஏந்திய வண்ணம்‌ விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்கள்‌ அறிந்துகொள்ளும்‌ வகையில்‌ வாசித்த வண்ணம்‌ சென்றனர்‌. பேரணியானது, சங்கராபுரம்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌ தொடங்கி முக்கிய வீதிகள்‌ வழியாக பேரணி சங்கராபுரம்‌ பேருந்து நிலையத்தில்‌ நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட சமூக நலன்‌ மற்றும்‌ உரிமைகள்‌ துறை அலுவலர்‌ செல்வி.செ.தீபிகா, மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ திருமதி.த.விஜயலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சி பணிகள்‌ அலுவலர்‌ திருமதி.எஸ்‌.செல்வி, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு நல அலுவலர்‌ திரு.இளையராஜா, குழந்தைகள்‌ மைய பணியாளர்கள்‌, பள்ளி மாணவியர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

செய்தி வெளியீடு:

செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌,
செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌,
கள்ளக்குறிச்சி மாவட்டம்‌.