சொந்த மண்ணில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் விராட் கோலி ஆவார். சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 14,192 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 56 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அவர் சர்வதேச போட்டிகளில் சொந்த மண்ணில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார். 195 ஆட்டத்தில் அவர் 10 ஆயிரம் ரன்னை கடந்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங் 219 போட்டிகளில் இந்த சாதனையை படைத்து இருந்தார்.
சொந்த மண்ணில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் கோலி ஆவார். சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 14,192 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.