மாணவர்கள் செயல்முறையில் பாடங்களைக் கற்றுக்கொள்வதனால் வாழ்வில் உயர்வதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் – மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் அறிவுரை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆனர்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.34,70,000/- மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வக கட்டிடத்தை மானர்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இப, அவர்கள் முன்னிலையில் இன்று (07.12.2021) திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இவ்விழாவில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிபொறுப்பேற்றவுடன் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துப் பள்ளிக் கல்வித்துறைக்கெனக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும், சட்டமன்றத்தில் தமிழகத்தில் கூடுதலாக 10 புதிய அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அவற்றில் திருக்கோவிலூரிலும் ஒரு புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் மானர்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் திருக்கோவிலூருக்கு சொந்த வேலையின் காரணமாக வருகைபுரிந்தார்கள். அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆனர்கள், பெனர்கள் எனத் தனித்தனி பள்ளிகளாகப் பிரிக்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், நேற்றைய தினம் அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்தார்கள். தமிழ்நாட்டில் கல்வியை உலக தரத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கிலும், மாணவர்கள் புத்தக அறிவு மட்டுமின்றி, செயல்முறை அறிவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் பள்ளிகளில் ஆய்வகங்கள் ஏற்படுத்திடவும், பழுதடைந்த ஆய்வகங்களை புதுப்பித்திடவும், மான்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபில் அரசு ஆளர்கள் மேல்நிலைப்பள்ளியில் 2,032 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். இவர்களில் 1,030 மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் பயின்று வருகிறார்கள். இதனால் இப்பள்ளியில் உள்ள ஆய்வக கட்டிடம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்றைய தினம் இந்த ஆய்வக கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது. இந்த ஆய்வக கட்டிடம் 10-ம் வகுப்பு மாணவர்கள் பயில்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதற்காக இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் ஆய்வக பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்விகள் மட்டுமின்றி கல்லூரிகளிலும், மாணவர்கள் பட்டறிவுடன் செய்முறை அறிவும், பெறுவதற்கு இது போன்ற ஆய்வகங்கள் உறுதுணையாக இருக்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். கொரேனா நோய் தொற்று காலம், வெள்ளப்பெருக்கு போன்ற அனைத்து இயற்கை இடர்பாடுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு தமிழக மக்களின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி சிறப்பாகப் பனரியாற்றி வருகிறார்கள். அடுப்பூதும் பெளர்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலை மாறித் தற்போது பெனர்கள் பள்ளி படிப்பிலும் பட்டப் படிப்பிலும், பட்ட மேற்படிப்பிலும் சாதித்து வருகிறார்கள். அதற்குக் காரணம் அண்ணா, பெரியார், டாக்டர்.கலைஞர் மற்றும் தற்போது மாளர்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் சம உரிமை கோட்பாட்டினை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.
பள்ளி படிப்பைத் தொடர்ந்து கல்லூரி படிப்பிற்கும் மானர்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு சிறப்பான அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிப்பைத் தொடரும் மாணவ/ மாணவிகளுக்கு உயர்கல்விகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள். எனவே, அரசு பள்ளிகளில் பயில்வதற்கு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும். இத்திட்டத்தின்மூலம் கிராமப்புற பள்ளி மாணவ/ மாணவிகள் மேற்படிப்பு பயில வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், திருக்கோவிலூர் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி அடுத்த கல்வியாண்டில் செயல்பட பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள ஆய்வக கூடத்தினை பயன்படுத்தி நன்றாகப் படித்து வாழ்வில் ஒரு சிறந்த நிலையை அடைய வேண்டும். இதுவே, மாணவர்களாகிய நீங்கள் இப்பள்ளிக்கு சேர்க்கும் பெருமையாகும். இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து, திருக்கோவிலூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தினையும், ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறையினையும், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தினையும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.புகழேந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் திருமதி.மு.தங்கம், திருக்கோவிலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.த.விஜயலட்சுமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவவலர்கள் கலந்து கொண்டனர்.