அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார், இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வலிமை அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 1-ந் தேதி, நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.