டுகாட்டி நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பாஸ்ட்ஹவுஸ் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் 2021 ஸ்கிராம்ப்ளர் மாடல்களை ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. தற்போது ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பாஸ்ட்ஹவுஸ் லிமிடெட் எடிஷன் மாடலை ஐரோப்பியா மற்றும் அமெரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பாஸ்ட்ஹவுஸ் மாடலில் 803சிசி, எல்-ட்வின் ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 74 பிஎஸ் பவர், 66.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
சஸ்பென்ஷனிற்கு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யுஎஸ்டி போர்க், கியாபா மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 330 எம்எம் டிஸ்க், பின்புறம் 245 எம்எம் டிஸ்க் மற்றும் போஷ் கார்னெரிங் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.