மேற்கு வங்கத்தில் மம்தாவின் விளையாட்டு முடிந்துவிடும் என்றும், வளர்ச்சி தொடங்கும் என்றும் பிரதமர் மோடி பிரசாரத்தின்போது பேசினார்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று புருலியாவில் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் மோடி பேசும்போது, மம்தா அடிக்கடி கூறும் ‘விளையாட்டு ஆரம்பம்’ என்ற வாக்கியத்தை பயன்படுத்தி அவருக்கு பதிலடி கொடுத்தார். மோடி பேசியதாவது:-
திதி (மம்தா) அவர்களே, நீங்கள் 10 ஆண்டுகள் விளையாடிவிட்டீர்கள். இப்போது உங்கள் விளையாட்டு முடிந்துவிடும். வளர்ச்சி தொடங்கும்.
மம்தாவும் அவரது சகாக்களும் மாவோயிஸ்டுகளை ஊக்குவிப்பதை நாங்கள் அறிவோம். பழங்குடியினருக்கும் ஏழைகளுக்கும் மத்திய அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்கவிடாமல் தடுத்து, அவர்களுக்கு துரோகம் செய்கிறது திரிணாமுல் அரசு.
மேற்கு வங்க மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தை வழங்குவதற்கான பல வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. மே 2 ஆம் தேதி மம்தா வெளியேறப்போகிறார். உண்மையான மாற்றம் வரப்போகிறது. பயப்பட வேண்டாம்.