ஐகூ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இந்திய சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஐகூ 7 ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது இரண்டு புதிய ஐகூ ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இதில் ஒன்று ஐகூ 7 என்றும் மற்றொரு மாடல் ஐகூ நியோ 5 என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் அறிமுகமானதில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஏற்கனவே ஐகூ 7 இந்திய வேரியண்ட் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு ஐகூ ஸ்மார்ட்போன்கள் I2009 மற்றும் I2011 எனும் மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. இதில் I2009 ஐகூ 7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றும் I2011 ஐகூ நியோ 5 மிட்-ரேன்ஜ் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். தளத்தில் I2012 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
தற்போதைய தகவல்களின்படி ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஐகூ பிராண்டின் ஐகூ 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.