இங்கிலாந்து தனது வர்த்தக தொடர்புகளை ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்து குடியரசு தின விழாவில் சிறப்பு. விருந்தினராக பங்கேற்க திட்டமிடப்பட்டது.
ஆனால் இங்கிலாந்தில் கொரோனா நோய் தொற்று மீண்டும் வேகமாக பரவியதால் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தை ரத்து செய்தார். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் இந்தியாவுக்கு வருகிறார்.
இதை அவரது அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து வெளியேறிய பிறகு போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் பெரிய சர்வதேச பயணம் இதுவாகும்.
இங்கிலாந்து தனது வர்த்தக தொடர்புகளை ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மெக்சிகோ, வியட்நாம் உள்ளிட்ட 11 பசிபிக் ரிம் நாடுகளை பிரதிநிதித்துவப்படும் டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மையில் சேர இங்கிலாந்து கடந்த மாதம் விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் ஆசியான் கூட்டமைப்பில் ஆலோசகராக சேரவும் விண்ணப்பித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பெருளாதார வளர்ச்சியை மேம்படுத்த போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். இதில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதனால் போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.