சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் களம் காண்கிறது.
இது தொடர்பாக பா.ம.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 10 தொகுதிகளில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
1. பென்னாகரம்-ஜி.கே.மணி, 2. ஆத்தூர் (திண்டுக்கல்)-ம. திலகபாமா, 3. கீழ்ப்பென்னாத்தூர்-செல்வக்குமார், 4. திருப்போரூர்-திருக்கச்சூர் கி.ஆறுமுகம், 5.ஜெயங்கொண்டம்- கே.பாலு.
6. ஆற்காடு-கே.எல்.இளவழகன், 7. திருப்பத்தூர்-டி.கே.ராஜா, 8. தர்மபுரி-எஸ்.பி.வெங்கடேஸ்வரன், 9.சேலம் மேற்கு-இரா. அருள், 10. செஞ்சி-எம்.பி.எஸ்.ராஜேந்திரன்.
இதனைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
1. மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, 2. விருத்தாசலம் – ஜே.கார்த்திகேயன், 3. சேப்பாக்கம் – ஏ.வி.ஏ.கஸ்ஸாலி, 4. நெய்வேலி – கோ.ஜெகன், 5. கும்மிடிப்பூண்டி – எம்.பிரகாஷ், 6. சோளிங்கர் – அ.ம.கிருஷ்ணன், 7. கீழ்வேளூர் (தனி) – வேத.முகுந்தன், 8. காஞ்சீபுரம் – பெ.மகேஷ்குமார், 9. மைலம் – சி.சிவக்குமார்.
மேற்கண்ட தகவலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.