பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. பஜாஜ் செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 1.15 லட்சம் மற்றும் ரூ. 1.20 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது முந்தைய விலையை விட முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். தற்போது செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் நாட்டின் மற்ற நகரங்களிலும் இதன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு மாற்றமும் செய்யப்படவில்லை.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, பெரிய சீட் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பஜாஜ் செட்டாக் மாடலில் 4Kw எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார் 16 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வரை செல்கிறது. இது ஸ்டான்டர்டு மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் ஆகும்.