அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாகவும், இர்பான் பதான் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கோப்ரா படம் வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறி உள்ளார்.
ரம்ஜான் பண்டிகைக்குள் படத்தின் பின்னணி வேலைகள் முடிக்க முடியாது என்பதனால் ஜூலை மாதம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.