கிள்ளியூர் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனோவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அமமுக வேட்பாளராக ஏ.சீமா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.ம.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6-ந் தேதி அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் (தனி) தொகுதி வேட்பாளராக இரா.அண்ணாதுரை நிறுத்தப்படுகிறார். கிள்ளியூர் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனோவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அ.ம.மு.க. வேட்பாளராக ஏ.சீமா அறிவிக்கப்படுகிறார்.