கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் ஜெகந்நாதன் எச்சரித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம், பருத்தி, கரும்பு மற்றும் இதர பயிர்கள் மேல் உரம் இடும் தருவாயில் உள்ளது.யூரியா 425 மெ.டன், டி.ஏ.பி., 89 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 54 மெ.டன் உரங்கள் நேற்று சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இது மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையத்திற்கு பிரித்து அனுப்பப்படும்.மாவட்டத்தில், உள்ள விவசாயிகள் யூரியாவை பயிர்களுக்கு தேவையான அளவு மட்டும் வாங்கி பயனடைய வேண்டும்.
உர விற்பனையாளர்கள் அனைத்து உரங்களையும் உரிய விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன் படி உர உரிமம் ரத்து செய்வதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.