சுசீந்திரம் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சுசீந்திரம் அருகே உதிரம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி இந்து (வயது20). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த இந்து கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.