உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா மொத்தம் 8 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்றவண்ணம் உள்ளனர்.
இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய அணி, போலந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதேபோல் இந்திய ஆண்கள் அணி, வியட்நாம் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
பெண்கள் அணியில் மனு பாகெர், யாஷாஸ்வினி தேஸ்வால், ஸ்ரீ நிவேதா பரமானந்தம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆண்கள் அணியில் சவுரப் சவுத்ரி, ஷாஜர் ரிஸ்வி, அபிஷேக் வர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இன்று வாங்கிய 2 தங்கப் பதக்கங்களைத் தொடர்ந்து, இந்தியா மொத்தம் 8 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.