ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வழக்கமான மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒப்போ மட்டுமின்றி பல்வேறு இதர சீன நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிட திட்டமிட்டு வருகின்றன. முன்னதாக பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கின்றன.
கூகுள் நிறுவனமும் இந்த ஆண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு சாம்சங் நிறுவனம் டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
இது திறக்கப்பட்ட நிலையில் 7.7 இன்ச் அளவிலும், வெளிப்புறம் 2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் தனது மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதுதவிர சாம்சங் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய மாடல்களை மேம்படுத்தி புது மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.