உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
விஜய் சேதுபதி – எஸ்.பி.ஜனநாதன்
தமிழ்த் திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். ஜெயம் ரவி, அருண் விஜய், ஆரி, சௌந்தரராஜா, தன்ஷிகா, வெற்றி மாறன், சீனு ராமசாமி, சிம்பு தேவன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தற்போது நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து எஸ்.பி.ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். எஸ்.பி.ஜனநாதன தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணியின் போது வீட்டுக்கு சென்ற எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.