அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த சிலர் விருந்து நடந்த இடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதிகாலையில் இது நடந்தது.
அங்கு இருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். எதிர் பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக துப்பாக்கியை வீசி விட்டு தப்பி விட்டனர்
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து 4 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யார்? எதற்காக விருந்து நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.