அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிட்டது. இதையடுத்து இன்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதன் பிறகு பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
விளம்பரம்
சிஆர்எம் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? சேல்ஸ்ஃபோர்ஸ் சி.ஆர்.எம் ஐ பயன்படுத்தியதால் நிறுவனங்களின் விற்பனை 38% அதிகரித்துள்ளது. மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!
வழங்குவோர் Salesforce
திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
பொங்கல் திருநாள் மாநில பண்பாட்டு தினமாக கொண்டாடப்படும்.
ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
சொத்துவரி அதிகரிக்கப்படாது.
பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.4-ம் விலை குறைக்கப்படும்.
கொரோனா நிவாரணமாக ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
சைபர் காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறப்படும்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.