கொரோனா தொற்று பரவி வருவதால்,வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செரிவூட்டும் கருவி தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சரியான ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்த தொகுப்பு இது.
கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களின் தேவை முக்கியமானது. இந்த ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், காற்றை இழுத்து அதில் இருக்கும் ஆக்சிஜனை பிரித்தெடுக்கிறது. தேவையில்லாத மற்ற வாயூக்களை நீக்குகிறது. இதன் மூலம் கிடைக்கப்பட்ட செரிவூட்டப்படட் ஆக்சிஜன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் மூலம் வழங்கப்படும்.
ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை நீங்கள் வாங்க நினைத்தால், வாட்ஸ் ஆப்., சமூகவலைதளங்கில் வரும் விளம்பரத்தை பார்த்து ஏமாற வேண்டாம். ஃபிளிப்ஸ் ( Philips) மெடிகார்ட் ( Medikart) உள்ளிட்ட பிரத்யேக பிராண்டுகளை வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் ஆக்சிஜன் வரை தயாரிக்கும் சீனா மற்றும் இந்திய பிராண்டுகளின் விலை ரூ 50,000 – ரூ 55,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஃபிலிப்ஸ் ( Philips) நிறுவனம் இந்தியாவில் ஒரே மாடல் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இது ரூ. 65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களின் பிராண்டுகள் ரூ. 1.50 – 1.75 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Philips EverFlo
லேசானா கொரோனா அறிகுறி உள்ளவர்கள் இந்த பிராண்டை பயன்படுத்தலாம். இந்த ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் ஒரு நிமிடத்திற்கு 0.5 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை ஆக்சிஜன் தயாரிக்கும். 93 சதவிகித சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் இதன் மூலம் கிடைக்கும். 14 கிலோ எடையும், 350 வாட்டில் இது இயங்கும். மேலும் ஆக்சிஜன் அளவு குறைந்தால் அதை சுட்டிகாட்டும் அலாரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
AirSep New Life Intensity
இந்த ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் வரை ஆக்சிஜன் வழங்கும். இந்த ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் மூலம் ஒரே நேரத்தில் கொரோனா பாதித்த இரண்டு பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். 26.3 கிலோ எடையும், 590 வாட்டில் இது இயங்கும். 92% சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் இதன் மூலம் கிடைக்கும்
GVS 10L Oxygen concentrator
இந்த ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் வரை ஆக்சிஜன் வழங்கும். முந்தைய பிராண்டைப்போலவே இதிலும் கொரோனா பாதித்த இரண்டு பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். 93 சதவிகித சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் இதன் மூலம் கிடைக்கும். இது 26 கிலோ எடையும், 230 வாட்டில் இயங்கும்.
DeVilbiss 10 litre Oxygen concentrator
இது ஒரு அமெரிக்கா நிறுவனத்தின் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் ஆகும். இந்த ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் நிமிடத்திற்கு 2 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் வழங்கும். 96 % சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் இதன் மூலம் கிடைக்கும். 19 கிலோ எடையும், 230 வாட்டில் இது இயங்கும்.
PORTABLE OXYGEN CONCENTRATORS
இது மற்ற ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் போல் சக்திவாய்ந்ததாக செய்லபடாது. ஆனால் இந்த கான்சென்ட்ரேட்டர்களை நமது ஸ்மார்ட் போண் போல் சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். கூட்டமான மருத்துவமனைகளில், நோயாளிகள் காத்திருக்கும்போது இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.