பெட்ரோல்–டீசல் விலை கடந்த ஆண்டு(2017) ஜூன் மாதம் 16–ந் தேதி முதல் தினசரி நிர்ணயம் என்ற நடைமுறைக்கு மாற்றப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 68 ரூபாய் 02 காசுக்கும், டீசல் 57 ரூபாய் 41 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பெட்ரோல்–டீசல் விலை கடந்த 4 நாட்களாக இறங்குமுகமாக இருக்கிறது. கடந்த 17–ந்தேதிக்கு பிறகு, பெட்ரோல்–டீசல் விலை குறைந்துள்ளது.நேற்று மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசு குறைந்து, 84 ரூபாய் 96 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 18 காசு குறைந்து, 79 ரூபாய் 51 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 14 காசும், டீசல் 53 காசும் குறைந்து இருக்கிறது.