கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான அழகப்பா நடுநிலைப்பள்ளி 1960 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவராகவும் ,நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் ,அரசு பணியாளர்களாகவும் பணியாற்றி வருகிறனர். தற்சமயம் இந்த பள்ளி மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது.பள்ளி நிர்வாகம் சரியான முறையில் பள்ளியை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதாலும், சமையலறை சுத்தமின்றி சிதலமடைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் சமைப்பதும் ,கழிவுநீரை வெளியேற்றுவதும் அருகாமையிலே உள்ளதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.அதுமட்டுமின்றி பள்ளி சுற்றுச்சுவர் ஏதும் இல்லாததால் பள்ளி மாணவர்கள் பள்ளியை விட்டு ரோட்டின் வழியாக செல்லாமல் செடி மரக்கொடிகள் அடைந்திருக்கும் ஆபத்தான வழியாக செல்கிறனர். கழிவறைகளில் மேற்குறை இல்லாததால் பெண் குழந்தைகள் கழிவறை செல்லும் பொழுது சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சிலர் வீடியோ எடுப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.பள்ளியில் 13 ஆசிரியர்கள் பணியாற்ற உள்ள நிலையில் தற்போது 8 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பாக உடற்கல்வி ஆசிரியர் இல்லை என்பது பெறும் வருத்தத்துக்குரியதாகவும் இருக்கிறது என பள்ளி மாணவ மாணவிகள் கூறி வருகிறனர்.இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ,வட்டார வளர்ச்சி அலுவலர் ,பூட்டை ஊராட்சி கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியபடுத்தி இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாவட்ட கல்வி அலுவலருக்கும் வட்டார கல்வி அலுவலர்க்கும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்ற சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பள்ளியில் 380 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறனர். இதே போன்ற நிலைமை தொடர்ந்தால் 380 மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு ஏற்படும் என்பதற்காக பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு வருகிறனர்
இதனை செவி சாய்க்காத அரசு அதிகாரிகளை புரம் தள்ளி அதே பள்ளியில் முன்னாள் படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து அப்பள்ளியின் கழிவரைக்கு மேற்கூறை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்தனர் அதன் படி முன்னாள் மாணவர்கள் செலவில் மேற்கூறை அமைக்கபட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடதக்கது. இது தற்போது பள்ளியில் படித்து வரும் மாண்வர்களிடையே பெறும் வரவற்ப்பை பெற்றுள்ளது.