டிராக்டர் மோதி 3 வயது சிறுவன் உயிரிழப்பு ! டிராக்டர் டிரைவர் தப்பி ஓட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் முகில்ராஜ் மூன்று வயதான சிறுவன் அப்பகுதியில் எல்.கே.ஜி படித்து வருகிரான் முஹரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் தனது பாட்டியுடன் கடைக்கு சென்றுள்ளார் அப்போது சாலையின் ஓரமாக விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது அவ்வழியாக பரமனத்தத்திலிருந்து ஜவுளிகுப்பம் சென்று கொண்டிருந்த டிராக்டர் சிறுவன் மீது மோதி விபத்துகுள்ளானது இதில் முன் பக்க சக்கரம் ஏறி சிறுவன் முகில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.இது குறித்து தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.