திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும் மகாபாரத சொற்பொழிவு, திருநங்கைகள் தாலி கட்டுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சாமி தேரில் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் களப்பலி உற்சவம், இந்திர வாகனத்தில் சாமி காட்டுக் குகைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், உபயதாரர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Follow US
Find US on Social Medias
- Advertisement -

Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!