தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததால் அந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு தாமதமானது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லாரி தொப்பூர் கணவாய் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது காவலர் குடியிருப்பு அருகில் முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி இடது புறத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் நெல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் காய்கறிகளை ஏற்றிச் சென்ற வாகனம் நசுங்கி உருக்குலைந்து நெல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நடுரோட்டில் கவிழ்ந்ததால் நெல் மூட்டைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவிலேயே கொட்டிவிட்டது.
அதன் பின்னர் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி திடீரென கவிழ்ந்தது. அதன் பின்னால் குஜராத்திலிருந்து ஈரோட்டிற்கு எண்ணெய் டேங்கர் வந்து கொண்டிருந்தது.
அந்த டேங்கர் லாரியும் திடீரென லாரி கவிழ்ந்ததில் சற்றும் எதிர்பாராத நிலையில் விபத்து ஏற்பட்டதால் கவிழ்ந்திருந்த லாரி மீது டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் 3 வாகனங்களில் சென்ற டிரைவர்கள் மிதமான காயங்களுடன் உயிர்தப்பினர்.
தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததால் அந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு தாமதமானது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.