சென்னையில் மொத்தம் 221 இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு அதிரடி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
டிஜிபி திரிபாதி
சட்டமன்ற தேர்தலையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. நேற்று சென்னையில் 56 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை சி.பி.சி.ஐ.டி., பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு மாற்றி டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டார்.
மேலும் 116 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னை நகருக்குள்ளேயே மாறுதல் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவையும், டி.ஜி.பி.திரிபாதியே பிறப்பித்துள்ளார். இவர்கள் தவிர 49 போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் சென்னையில் 221 இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு அதிரடி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.