லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டிபென்டர் மாடலை புது என்ஜினுடன் அறிமுகம் செய்தது.
லேண்ட் ரோவர் நிறுவனம் சத்தமின்றி புதிய டிபென்டர் மாடலை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்தது. புதிய டிபென்டர் டீசல் வெர்ஷன் 90 மற்றும் 110 மாடல்களில் கிடைக்கிறது. டீசல் என்ஜின் கொண்ட புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல்களின் விலை ரூ. 94.36 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.08 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
லேண்ட் ரோவர் டிபென்டர் டீசல் எஸ்இ, ஹெச்எஸ்இ, எக்ஸ்-டைனமிக் ஹெச்எஸ்இ மற்றும் எக்ஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் 90 மற்றும் 110 மாடல்களில் கிடைக்கின்றன. டீசல் என்ஜின் கொண்ட மாடல்கள் பெட்ரோல் வேரியண்ட் போன்ற தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது.
டீசல் மாடலில் 3.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 298 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் டீசல் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 191 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.