தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பிரபல இயக்குனர் சொன்ன வரலாற்று கதை பிடித்திருப்பதாகவும் விரைவில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதையடுத்து வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் வசந்தபாலன், சூர்யாவிடம் கதை சொல்லி கவர்ந்திருக்கிறார். வசந்தபாலன் சொன்ன வரலாற்று கதை சூர்யாவிற்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் இருவரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் வசந்தபாலன், ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.