மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இன்று முதல் எலாஸ்டிக் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறுகையில்,
மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் 2 நாட்கள், எலாஸ்டிக் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.
அனைத்து எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன. இப்போராட்டத்தால் ரூ.4 கோடி மதிப்பிலான 3 கோடி மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தி முடங்கும்.
ரப்பர், நூல் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எனவே நாளை மறுநாள் 27-ந்தேதி முதல் எலாஸ்டிக் உற்பத்தியும் பாதியாக குறைக்கப்படுகிறது. எங்கள் துறையினரின் இன்னல்களை உணர்ந்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் எலாஸ்டிக்கிற்கு விலை உயர்வு வழங்க முன்வர வேண்டும் என்றார்
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.