பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளுக்கு பயண தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை 23-ந்தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.