தொழில்நுட்பம்

OnePlus புதிய பீட்டா அப்டேட் !!

OnePlus Nord பயனர்கள் இந்த வாரத்தில் முதல் OxygenOS 11 ஓபன் பீட்டா அப்டேட்டை பெறுவார்கள். இந்த ஓபன் பீட்டா கட்டமைப்பிலிருந்து டெவலப்பர்கள் மற்றும் பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவு நிலையான கட்டமைப்பை வெளியிடுவதற்கான காலக்கெடுவை ஆணையிடும்.

OnePlus ஸ்மார்ட்போனில் புதிய அப்டேட் அறிவிப்பு

ஒன்ப்ளஸ் போன்கள் (OnePlus Phone) இன்றைய நிலவரப்படி மொபைல் சந்தையில் இருக்கும் சிறந்த முதன்மை மொபைல்களில் ஒன்றாகும். ஸ்னாப்டிராகன் குவால்காம் ப்ராசெஸ்ஸோர் மூலம் இது இயக்கப்படுகிறது, இந்த போன்கள் மின்னல் வேகத்தில் இயங்குகின்றன.  ஆண்ட்ராய்டு 11ஐ (Android 11) அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11க்கு (OxygenOS 11) தற்போதுள்ள போன் வரிசையை அப்டேட் செய்வதற்கான அதன் திட்டங்கள் குறித்து ஒன்பிளஸ் (OnePlus) தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளது. 

பழைய OnePlus போனை பயன்படுத்தும் எவரும் இந்த செய்தியை கேட்க ஆர்வமாக இருப்பார்கள் என்பதே உண்மை. ஏனெனில் ஒன்பிளஸ் 6 முதல் அனைத்து போன் தொகுப்புகளில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 (OxygenOS 11) அப்டேட் செய்ய தகுதி பெறும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். . OnePlus 8T ஸ்மார்ட்போன் விற்பனை ஒரு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது, ஏற்கனவே OxygenOS 11,ஆனது OnePlus 8 மற்றும் OnePlus 8 Proவில் இயங்கிவருகிறது.

இப்போது, OnePlus 7T, OnePlus 7 மற்றும் OnePlus 6 ஸ்மார்ட்போன்களுக்கும் இது கிடைக்கிறது. 7 மற்றும் 7T சிரீஸ் போன்களுக்கான OxygenOS 11 வெளியீட்டில் அவை செயல்படுவதாக ஒன்பிளஸ் (OnePlus) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சாதனங்களில் டேட்டா டிகிரிப்ஷனில் (data decryption) சற்று சிக்கலில் உள்ளது. இது குறித்து ஒன்பிளஸ், “இந்த எல்லா சாதனங்களுக்கும் ஒரே நேரத்தில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11ஐ வெளியிடுவதற்கு இணையாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

நீங்கள் கேள்விப்பட்டபடி, ஆண்ட்ராய்டு 11ஐ 7 மற்றும் 7T தொடர்களுக்கு போர்ட்டிங் செய்யும் போது, இந்த சாதனங்களில் டேட்டா டிகிரிப்ஷனில் (data decryption) சிக்கலை எதிர்கொண்டோம். நாங்கள் குவால்காம் சம்மந்தமாக அதிக ஆராய்ச்சி செய்தோம், அதன் சப்போர்ட் உடன், நாங்கள் ஏற்கனவே ஒரு குளோஸ்ட் பீட்டா சோதனையை நடத்தி வருகிறோம், ”என்று செய்தி  வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 மற்றும் 7T சிரீஸ்களுக்கான முதல் OxygenOS 11 ஓபன் பீட்டா விரைவில் லேண்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Nord பயனர்கள் இந்த வாரத்தில் முதல் OxygenOS 11 ஓபன் பீட்டா அப்டேட்டை பெறுவார்கள். இந்த ஓபன் பீட்டா கட்டமைப்பிலிருந்து டெவலப்பர்கள் மற்றும் பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவு நிலையான கட்டமைப்பை வெளியிடுவதற்கான காலக்கெடுவை ஆணையிடும். OnePlus Nord 105G / 100 மற்றும் OnePlus 6 மற்றும் OnePlus 6T போன்களுக்கு, ஓபன் பீட்டா மற்றும் இறுதி OxygenOS 11 வெளியீடு குறித்த கூடுதல் காலக்கெடுவை விரைவில் பகிர்ந்து கொள்ளப்போவதாக OnePlus நிறுவனம் தெரிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles