வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது.
முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சால் 41.5 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. மகமதுல்லா அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். போல்ட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் நீசம், சாண்ட்னெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 21.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் 49 ரன்னும் (அவுட் இல்லை), மார்ட்டின் கத்தில் 19 பந்தில் 38 ரன்னும் (3 பவுன்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் வருகிற 23-ம் தேதி கிறிஸ்ட் சர்ச்சில் நடக்கிறது.