முக ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மீண்டும் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். நாளை (16-ந் தேதி) மாலை சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு தொகு திக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார். பின்னர் 17-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். மு.க. ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.