சேலம் மாநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சேலத்திற்கு இரவு திரும்பிய எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். இன்று காலை ஓமலூருக்கு சென்றார். அங்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற, இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இன்று மாலை சேலம் மாநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து சேலம் மாநகரில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. நாளையும் (14-ந் தேதி) சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் கட்சியினருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து எடப்பாடி தொகுதியில் தனக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்கிறார். பின்னர் மாலையில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி அவர் செல்லும் வழிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.