ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மியின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல் மார்ச் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தற்போது எம்ஐ சீரிசில் 65 இன்ச் டிவி மாடல்களை சியோமி ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் 70 இன்ச் ரெட்மி டிவி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 86 இன்ச் மாடல் இங்கு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகறது.
சியோமி இந்தியா ஸ்மார்ட் டிவி பிரிவுக்கான தலைவர் ஈஷ்வர் நீலகண்டன், புதிய ஸ்மார்ட் டிவிக்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் என தெரிவித்து இருந்தார். மேலும் சியோமி நிறுவனம் உற்பத்தியை ஊக்குவிக்க ரேடியண்ட் எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து உள்ளது.