ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரத்தை அதன் சி.இ.ஒ. அறிவித்து இருக்கிறார்.
ரியல்மி நார்சோ 30 சீரிஸ் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார். புதிய ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாத வாக்கில் வெளியிடப்பட்டது. சமீபத்திய யூடியூப் நேரலையில், ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நார்சோ 30 4ஜி வெர்ஷன் மட்டும் வெளியிட திட்டமிட்டு, தற்போது 4ஜி மட்டுமின்றி 5ஜி வெர்ஷனும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒரே நிகழ்வில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ரியல்மி நார்சோ 30 பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ மாடல்கள் தற்போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ரியல்மி யுஐ கொண்டுள்ளது. விரைவில் இரு மாடல்களுக்கும் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.