பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டம் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் தாராபுரம் வர உள்ளனர்.
பிரசார கூட்டத்திற்காக 30-ந்தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் மோடி, பின்னர் கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாலக்காடு செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்து கொண்டு ஹெலிகாப்டர் மூலமாக தாராபுரத்திற்கு மதியம் வருகிறார்.
இதற்காக பிரசார மேடைக்கு பின்னால் ஹெலிபேடு அமைக்கப்படுகிறது. தற்போது பிரசார கூட்டம் நடைபெறும் பகுதியில் 48 புல்டோசர், பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டம் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இன்னும் 2 நாட்களில் டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் (எஸ்.பி.ஜி.) தாராபுரம் வர உள்ளனர். அவர்கள் பொதுக்கூட்ட மேடை, ஹெலிபேடு, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். தமிழக போலீஸ் உயரதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இதனிடையே பிரசார கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா நாளை (25-ந்தேதி) காலை நடக்கிறது. இதில் பா.ஜ.க. வேட்பாளரும், அக்கட்சியின் மாநில தலைவருமான எல். முருகன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி தமிழக போலீஸ் உயரதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., திஷா மித்தலும் மாவட்ட போலீசாருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.