மும்பையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரெயில் நிலையம், பஸ் நிறுத்தம், வணிக வளாகம், சந்தைகள் உள்பட பல இடங்களில் நடத்திய சோதனையில் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடமாடியதாக 2 லட்சம் பேர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர்.
மும்பையில் கொரோனா வைரஸ் 2-வது அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி மும்பையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் மற்றும் மாநகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரெயில் நிலையம், பஸ் நிறுத்தம், வணிக வளாகம், சந்தைகள் உள்பட பல இடங்களில் நடத்திய சோதனையில் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடமாடியதாக 2 லட்சம் பேர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர்.
இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.4 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மும்பை போலீஸ் உதவி கமிஷனர் சைத்தன்யா தெரிவித்து உள்ளார்.
இதில் 50 சதவீதம் மாநகராட்சிக்கும், மீதி தொகை போலீஸ் நலத்திட்ட பணிகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.