பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் செயல்பட்டு வந்த சுமார் 100 கோடிக்கும் அதிகமான அக்கவுண்ட்களை நீக்கியதாக தெரிவித்து இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலி அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் நீக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்தது.
இது மட்டுமின்றி கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து பரவிய 1.2 கோடி போலி தகவல்கள் அடங்கிய பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில், இதுபற்றிய போலி தரவுகள் அதிக எண்ணிக்கையில் பரவி வந்தது.
பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் போலி செய்தி பரவலை எவ்வாறு கையாள்கின்றன என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விரைவில் விளக்கமளிக்க இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது போலி அக்கவுண்ட் நீக்கம் பற்றிய தகவல்களை பேஸ்புக் வெளியிட்டு உள்ளது.