ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே மேல உளுர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மனைவி சுமதி (38). நேற்று இரவு வீட்டில் வாசல் படியில் உட்கார்ந்து இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் சுமதி அணிந்திருந்த 2 பவுன் செயின் செயின் மற்றும் 3/4 பவுன் தாலி இவற்றை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். இதுகுறித்து ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.