ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிளை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்தது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 6,87,386 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
இத்துடன் டூயல்-சேனல் ஏபிஎஸ், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் ஹோண்டா இக்னிஷன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய சிபி500எக்ஸ் மாடலில் 471சிசி, 8 வால்வு, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 பிஹெச்பி பவர், 43.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிபி500எக்ஸ் மாடல் கவாசகி வெர்சிஸ் 650, சுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி மற்றும் பெனலி டிஆர்கே 502 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.