போக்கோ பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எப்3 ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விர்ச்சுவல் முறையில் நடைபெறும் நிகழ்வில் புது எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் போக்கோ எப்3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்கள் அறிமுகம் பற்றி போக்கோ குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் போக்கோ எப்3 மாடல் மார்ச் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம். போக்கோ வெளியிட்ட தகவல்களின்படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ வெளியீடு மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனினும், போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலின் மற்றொரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.