கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி, கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.