திருமலையில் ஆகாசகங்கா, ஜபாலி தீர்த்தம் உள்ளிட்டவைகளுக்கு அருகில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதி உள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரந்து விரிந்துள்ள இந்த மலையில் செம்மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளது.
திருமலையில் ஆகாசகங்கா, ஜபாலி தீர்த்தம் உள்ளிட்டவைகளுக்கு அருகில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதில் தீ மளமளவென பரவி 100 ஏக்கர் பரப்பளவிற்கு மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனப்பகுதிக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மரங்கள், மூலிகை செடி கொடிகள் எரிந்து நாசமானது.
வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது மர்மநபர்கள் வனப்பகுதிக்கு தீவைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கேமராவில் பதிவானவர்களின் உருவத்தை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செம்மரம் வெட்ட வந்த மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.