ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ பிராண்டு லேப்டாப் மாடல்கள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், ஜியோபுக் பெயரில் குறைந்த விலை லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய 5ஜி ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகி இருப்பதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அல்லது ஆண்ட்ராய்டு கோ தளத்தை சார்ந்து இயங்கும் ஜியோஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு கோ தளம் என்ட்ரி லெவல் ஹார்டுவேர் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும்.
ஏற்கனவே வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ ஒஎஎஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஜியோபுக் லேப்டாப் மாடலும் இந்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த லேப்டாப் ஹெச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4ஜி மோடெம், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பரடுகிறது.