இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் 8டி புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 40,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கானது ஆகும்.
விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒரே ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.