அமேசான் தளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆப்பிள் டேஸ் பெயரில் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த விற்பனையில் ஐபோன் 12 சீரிஸ், ஐபேட் மினி, மேக்புக் ப்ரோ என பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அமேசானில் ஆப்பிள் டேஸ் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபோன் 12 மினி மாடல் ரூ. 67100 துவக்க விலையில் கிடைக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 2800 குறைவு ஆகும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 11 ப்ரோ விலை ரூ. 79,900 என மாறி இருக்கிறது. இதுதவிர ஐபேட் மாடல்களுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான சேமிப்பு, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு தள்ளுபடி, கேஷ்பேக் தவிர, ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.