தேமுதிகவின் துணை செயலாளர் எல்கே சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 1000-ஐ தாண்டி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் தேமுதிகவின் துணை செயலாளர் எல்கே சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.