டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அயன், கவண், கோ, காப்பான் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.